நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை •538 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 538 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் 977 பேர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களில் 517 பேர் வெளிநாட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளம்–சீனா எல்லைப் பகுதியில் இமயமலையில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவைத் தொடர்ந்து, பாரியளவில் நீர், பாறைகள், பனி மற்றும் சேறு அடித்துச் சென்றதில் கிராமங்கள், வீதிகள், பாலங்கள் உள்ளிட்ட முக்கிய உட்கட்டமைப்புகள் அழிவடைந்துள்ளன.
ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், துண்டிக்கப்பட்ட பகுதிகளைச் சென்றடைய ஹெலிகொப்டர்களும் பயன்படுத்தப்படுகின்றன.
தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.









