தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகருக்கு வடக்கே இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக நாசர் மருத்துவ வளாகத்தை மேற்கோள்காட்டி, அங்குள்ள அல்ஜசீரா செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஒப்புக்கொள்ளப்பட்ட “போர் நிறுத்தம்” அமுலில் இருப்பதாகக் கூறப்பட்ட போதிலும், காசா முழுவதும் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்கள் இடம்பெற்று வரும் நிலையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.









