ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்குத் தேவையான நிலக்கரியை ஏற்றிய ‘IVS TRADER’ கப்பல் புத்தளம் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இதற்கமைய, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்படும் தரப் பரிசோதனைகள் விரைவில் நிறைவுசெய்யப்பட்டு, இன்று (04) பிற்பகல் நிலக்கரியை இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்நிலையில், மின்சக்தி, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க, நிலக்கரி கையிருப்பு தொடர்பான நிலைமையை ஆய்வு செய்வதற்காக இன்று காலை நுரைச்சோலை லக்விஜய மின்நிலையத்திற்கு விஜயம் செய்துள்ளார்.









