இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றங்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பொல்கொல்லையில் அமைந்துள்ள மகிந்த ராஜபக்ஷ அரங்கிற்கு கதிரைகள் கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த கொள்வனவு நடவடிக்கையால் மத்திய பொறியியல் ஆலோசனைப் பணியகத்திற்கு (CECB) சுமார் 79.7 இலட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.








