கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றப் பகுதியைச் சுற்றி பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பில் சந்தேகநபராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (16) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையிலேயே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வழக்கு விசாரணை இன்று (16) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளது.








