சட்டவிரோதமான முறையில் சொகுசு வாகனம் ஒன்றை வைத்திருந்ததாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் ஒக்டோபர் 28ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் பசந்த அமரசேன முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
அவரது சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெந்திஸ், குறித்த வழக்கு மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள வழக்கு என நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
இதனையடுத்து, வழக்கை இறுதித் தடவையாக எதிர்வரும் ஒக்டோபர் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதவான் உத்தரவிட்டார்.








