இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது.
டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாடு முழுவதும் இதுவரை 96,847 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
செப்டம்பர் மாதத்தில் இதுவரை 1,356 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மாவட்ட ரீதியில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், இது மொத்த நோயாளர்களில் 21.27 சதவீதமாகும்.
அதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் 19,412 பேரும், கண்டியில் 7,164 பேரும், களுத்துறையில் 6,212 பேரும், மாத்தறையில் 6,178 பேரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.









