தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதூவ அருகே இடம்பெற்ற வீதி விபத்தில் 65 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மத்தல நோக்கிப் பயணித்த வேனின் சாரதி உறங்கியதால், அதே திசையில் பயணித்த லொரியின் பின்புறத்தில் வேன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நேற்று (21) மாலை, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 93.6 கிலோமீற்றர் மைல்கல் அருகே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த வேன் சாரதியும், வேனின் முன் ஆசனத்தில் இடதுபுறமாகப் பயணித்த அவரது தாயாரும் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சாரதியின் தாயார் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கதிர்காமம் பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பில் பின்னதூவ அதிவேக நெடுஞ்சாலை கட்டுப்பாட்டு நிலையம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.








