நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, பல மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நிலச்சரிவு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று (22) இரவு 10 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கை நிலை 2 விடுக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தின் உடபாலத்த, மெததும்பற மற்றும் குண்டசாலை பகுதிகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பகுதிக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, எலப்பத்த மற்றும் குருவிட்ட பகுதிகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அதிக அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், நிலச்சரிவு மற்றும் பாறைகள் சரிந்து விழுதல் போன்ற அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய அபாயம் குறித்து அவதானமாக இருக்குமாறும், அவசர நிலை ஏற்படும் பட்சத்தில் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லத் தயாராக இருக்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.








