கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி, மகா சங்கத்தினரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட ‘காவி உடைக்கு நீதி – சுதந்திரத்திற்கான நடைபயணப் பேரணி’ இன்று (15) கொழும்பை வந்தடைந்து நிறைவடையவுள்ளது.
கடந்த 10ஆம் திகதி வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் ஆரம்பமான இந்த நடைபயணப் பேரணி, கடுகன்னாவை, கேகாலை, வரக்காபொல மற்றும் நிட்டம்புவ ஆகிய நகரங்களைக் கடந்து நேற்று (14) கடவத்தை நகரைச் சென்றடைந்தது.
இதற்கமைய, இன்று காலை கடவத்தை நகரிலிருந்து ஆரம்பமாகும் நடைபயணப் பேரணி கொழும்பை நோக்கி முன்னெடுக்கப்படவுள்ளது.








