சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் காவி உடையைக் களைவதற்குச் சிறைச்சாலை அதிகாரிகள் எடுத்துள்ள தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, எதிர்வரும் 22ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனுக்கள் இன்று (15) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான அமல் ரணராஜா, மகேன் கொபல்லவ மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதன்போது முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களைப் பரிசீலித்த நீதிபதிகள் குழாம், குறித்த மனுக்களை எதிர்வரும் 22ஆம் திகதி மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவிட்டது.
தீனியாவல பாலித தேரர் உள்ளிட்ட பிக்குகள் குழுவினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.







