நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 38 பாடசாலைகள் இன்று (21) மூடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலவும் வானிலை சூழ்நிலைக்கு ஏற்ப பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று காலை 9.00 மணி நிலவரப்படி, மத்திய மாகாணத்தில் 35 பாடசாலைகளும், சப்ரகமுவ, தெற்கு மற்றும் மேல் மாகாணங்களில் தலா ஒரு பாடசாலையும் என மொத்தம் 38 பாடசாலைகள் இயங்கவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.








