தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக, நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (27) விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து முன்பள்ளிகளையும் இன்று மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
முன்பள்ளிச் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து முன்பள்ளிகளினதும் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், 2026ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டபடி உரிய பரீட்சை நிலையங்களில் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்பதால், பரீட்சார்த்திகள் உரிய பரீட்சை நிலையங்களுக்குச் செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், உரிய வலயக் கல்விப் பணிப்பாளரைத் தொடர்புகொண்டு ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு:
- உடனடி அழைப்பு இலக்கம்: 1911
- தொலைபேசி இலக்கங்கள்: 0112784208, 0112784537
- தொலைநகல்: 0112784422








