சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்வரும் வெள்ளிக்கிழமை கையளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சபாநாயகருக்கு எதிராக 49 குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய நம்பிக்கையில்லாப் பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதில் பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களைப் பெறும் நடவடிக்கை இன்று (06) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்நிலையில், சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படுவதற்கு முன்னர் அவர் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.







