மத்திய காஸாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள அல்-மகாஸி அகதிகள் முகாமுக்குள், இஸ்ரேலிய இராணுவம் தனது கட்டுப்பாட்டில் உள்ளதாகக் கூறப்படும் ‘மஞ்சள் கோட்டை’ (Yellow Line) மேலும் உள்நோக்கி நகர்த்தியுள்ளது.
தரையில் உள்ள தகவல் மூலங்களின்படி, கடுமையான துப்பாக்கிச் சூடு மற்றும் தீவிர பீரங்கித் தாக்குதல்களுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காஸாவில் தனது கட்டுப்பாட்டின் கீழுள்ள பகுதிகளை இஸ்ரேலிய இராணுவம் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகின்றது. இதனால், பாலஸ்தீன மக்கள் பெருகிவரும் நெருக்கடிக்கு மத்தியில், குறுகிய பகுதிகளுக்குள் தஞ்சமடைய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஒப்பீட்டளவில் பாதுகாப்பானவை எனக் கருதப்படும் பகுதிகள்கூட, ஆளில்லா விமானத் தாக்குதல்கள் உள்ளிட்ட தொடர்ச்சியான அத்துமீறல்களுக்கு உள்ளாகி வருகின்றன.








