நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தி நடவடிக்கைகளை நாளை (22) முதல் மீண்டும் ஆரம்பிக்க முடியும் என தேசிய மின் கட்டமைப்பு செயல்பாட்டு நிறுவனம் (NSO) தெரிவித்துள்ளது.
மின் கட்டமைப்பில் ஏற்பட்ட சமநிலையின்மை காரணமாக கடந்த சனிக்கிழமை நாடு முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டதால், நேற்று முன்தினமும் நேற்றும் நாடு முழுவதும் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், இன்றும் (21) சுழற்சி முறையிலான மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
எனினும், நாளை (22) முதல் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க முடியும் என்பதால், மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய தேவை இருக்காது என தேசிய மின் கட்டமைப்பு செயல்பாட்டு நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.







