களுத்துறை சிறைச்சாலை வளாகத்தில் இருந்து இன்று (21) பிற்பகல் வானத்தை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.சிறைச்சாலைக்கு வெளியே இருந்து வந்த ஒருவர், பல பொதிகளை சிறைச்சாலை வளாகத்தினுள் வீசுவதற்கு முயற்சித்துள்ளார்.
இதன்போது, சிறைச்சாலையில் இருந்த அதிகாரிகள் குறித்த நபரை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
எனினும், அவர் பொதிகளைச் சிறைச்சாலைக்குள் வீசியதைத் தொடர்ந்து, அதிகாரிகள் வானத்தை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.இதன்போது, குறித்த நபர் வீசிய இரண்டு பொதிகள் சிறைச்சாலை வளாகத்தினுள் விழுந்துள்ளதாகச் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து, குறித்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், சிறைச்சாலை வளாகத்தினுள் கண்டெடுக்கப்பட்ட பொதிகளில் போதைப்பொருள் மற்றும் கஞ்சா இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








