போர்த்துக்கல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சமீபத்திய பேட்டி, உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தனது நீண்டகால காதலியான ஜோர்ஜினா ரோட்ரிகஸை திருமணம் செய்துகொண்ட பின்னர் அளித்த பேட்டியில், 2026-27 கால்பந்து பருவம் தனது தொழில்முறை கால்பந்து வாழ்க்கையின் இறுதி ஆண்டாக இருக்கக்கூடும் என ரொனால்டோ வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
கால்பந்து விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர் மகத்தான மரபொன்றை விட்டுச் செல்ல விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா இணைந்து நடத்திய 2026 FIFA உலகக் கிண்ணத்தில் தனது ஆறாவது உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்றதன் பின்னர், தனது ஓய்வு குறித்த முக்கிய முடிவை நோக்கி நகர்ந்துள்ளார்.
தற்போது சவூதி அரேபியாவின் அல் நாசர் கழகத்திற்காக விளையாடி வரும் ரொனால்டோ, கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தனது அதிக நேரத்தை குடும்பத்தினருடன் செலவிடவும், உலகம் முழுவதும் பயணம் செய்யவும், தனக்கு மிகவும் பிடித்த ‘பேடல்’ விளையாட்டில் ஈடுபடவும் விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.









