ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் கிரிக்கெட்டில் மூன்றாம் இடத்துக்கான ஆட்டத்தில் பங்களாதேஷை 63 ஓட்டங்களால் வீழ்த்திய இலங்கை அணி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 21 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும், தரிந்து ரத்நாயக்க அதிரடியாக 32 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 65 ஓட்டங்களை விளாசினார்.
அணித்தலைவர் சஹான் அரச்சிகே 33 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க, இலங்கை 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது.
166 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணி, 4 ஓட்டங்களுக்குள் முதல் மூன்று விக்கெட்டுகளையும் இழந்தது. நசும் அஹமட் அதிகபட்சமாக 26 ஓட்டங்களைப் பெற்றார்.
இறுதியில் பங்களாதேஷ் அணி 17.3 ஓவர்களில் 102 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இலங்கை சார்பில் நுவன் துஷார, தரிந்து ரத்நாயக்க, விஜயகாந் வியாஸ்காந்த் மற்றும் வனுஜ சஹன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.








