வவுனியாவைச் சேர்ந்த மூன்று வயது சிறுமி ஒருவர், கம்பளை டெல்டாவத்தையில் உள்ள உறவினர் வீட்டில் புதிய பாலைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருளை தவறுதலாக அருந்தியதில் உயிரிழந்துள்ளார்.
செட்டிக்குளம், வவுனியாவைச் சேர்ந்த குறித்த சிறுமி, தனது பெற்றோருடன் உறவினர்களைச் சந்திப்பதற்காக கம்பளைக்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறவினர்கள் நேற்று பிற்பகல் வீட்டின் முற்றத்தில் இருந்தபோது, சிறுமி வீட்டிற்குள் சென்று ஜன்னல் மீது ஏறி, தண்ணீர் என நினைத்து குறித்த இரசாயனப் பொருளை அருந்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
கம்பளை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையில், சிறுமி குறித்த திரவத்தை அருந்தியிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இரசாயனப் பொருளை அருந்தியதைத் தொடர்ந்து உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், விஷம் காரணமாக சிறுமி உயிரிழந்துள்ளார்.









