உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பாக ஈரான் அமெரிக்காவுக்கு முன்வைத்ததாகக் கூறப்படும் அமைதி உடன்படிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிராகரித்ததைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள சூழ்நிலையே கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு காரணமாகியுள்ளதாக அந்த ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்படி, WTI ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 1.08 சதவீதம் உயர்ந்து 93.47 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
அதேவேளை, BRENT ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 1.60 சதவீதம் அதிகரித்து 105 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.








