மாதம்பை – குளியாப்பிட்டிய வீதியின் ஹெலபண்டாரகம பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன், அவர்களின் தாய் பலத்த காயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி மின்சாரத் தூண் ஒன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்கள் தும்மலசூரிய – வீரகொடியானை பகுதியைச் சேர்ந்த 17 மற்றும் 11 வயதுடைய இரு சகோதரர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த தாய் சிலாபம் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பில் மாதம்பை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








