அக்குறணை, குடுகலை பகுதியில் அமைந்துள்ள வாகன உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடையொன்றில் இன்று (04) காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தத் தீ விபத்து காரணமாகப் பிரதான வீதியின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், தற்போது தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் கடுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








