2026 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை 2.88% ஆல் அதிகரிக்குமாறு தேசிய மின் கட்டமைப்பு இயக்குநர் (NSO) முன்மொழிந்துள்ளது.
எனினும், குறித்த காலப்பகுதியில் 1.46% மின்சாரக் கட்டண அதிகரிப்பை மாத்திரம் அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) பரிந்துரைத்துள்ளது.
இது தொடர்பான இறுதித் தீர்மானம், நாளை (5) நடைபெறவுள்ள பொதுமக்கள் கருத்தறியும் கூட்டத்தின் பின்னர் அறிவிக்கப்படும் என PUCSL தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் கருத்தறியும் கூட்டத்தில் பங்கேற்க விரும்புவோர் 0770399119 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து பதிவு செய்யுமாறு ஆணைக்குழு கோரியுள்ளது.








