இவ்வாண்டில் இதுவரை இலங்கையில் 37 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (15) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பதிவாகியுள்ள 37 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இவ்வாண்டில் இதுவரை துப்பாக்கிகள் உள்ளிட்ட 797 ஆயுதங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2025ஆம் ஆண்டில் மாத்திரம் 2,404 துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.








