இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 93,115 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இதுவரை 7,777 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். அங்கு இதுவரை 19,825 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் 18,475 பேரும், கண்டியில் 6,726 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மாத்தறை மாவட்டத்தில் 6,066 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 6,013 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.








