இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துகள் செப்டம்பர் மாதத்தில் 1.1% குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, ஆகஸ்ட் மாத இறுதியில் 6.92 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்த நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துகள், செப்டம்பர் மாத இறுதியில் 6.85 பில்லியன் அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளன.
இதன்படி, ஒரு மாத காலப்பகுதியில் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துகள் 78 மில்லியன் அமெரிக்க டொலர்களால் குறைந்துள்ளன.
சீன மக்கள் வங்கியுடனான நாணயப் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் பெறப்பட்ட நிதியும் நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துகளில் உள்ளடங்குவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.








