அக்டோபர் மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவு நாளை (14) பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இதற்கமைய, அஸ்வெசும முதலாம் கட்டத்தின் கீழ் 985,283 பயனாளிக் குடும்பங்களுக்கு 9.12 பில்லியன் ரூபாவும், இரண்டாம் கட்டத்தின் கீழ் 212,445 பயனாளிக் குடும்பங்களுக்கு 2.04 பில்லியன் ரூபாவும் வழங்கப்படவுள்ளன.
இதன்படி, இரண்டு கட்டங்களின் கீழும் மொத்தம் 1,197,728 பயனாளிக் குடும்பங்களுக்கு 11.16 பில்லியன் ரூபா நிதி வழங்கப்படவுள்ளது.
குறித்த கொடுப்பனவை நாளை (14) முதல் பயனாளர்கள் தங்களது அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.








