செப்டம்பர் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவு இன்று (16) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்யப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் 999,053 பயனாளி குடும்பங்களுக்கு ரூ.9,181,696,250 தொகை வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்யப்படவுள்ளது.
அதேவேளை, இரண்டாம் கட்டத்தின் கீழ் 213,335 பயனாளி குடும்பங்களுக்கு ரூ.2,120,856,250 தொகையை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பயனாளிகள் குறித்த கொடுப்பனவை நாளை (17) முதல் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை மேலும் தெரிவித்துள்ளது.








