அமெரிக்க வரிப்பணத்தை ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கும், கியூபா மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்குவதற்கும் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அந்த நிதியை உள்நாட்டு தேவைகளுக்காக முதலீடு செய்ய வேண்டும் என அமெரிக்க செனட்டர் கிறிஸ் வான் ஹோலன் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “அமெரிக்காவுக்கு முதலிடம்” என்ற கொள்கைக்கு என்ன ஆனது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வெளிநாட்டு போர்களுக்காக செலவிடப்படும் நிதியை அமெரிக்காவின் உள்நாட்டு முன்னுரிமைகளுக்கு திருப்பி விட வேண்டும் என வலியுறுத்திய அவர், “போதும், இனியும் வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.
(அல் ஜசீரா)









