பாகிஸ்தான் அணியின் தலைவர் சாஹிப்ஸதா பர்ஹான் (Sahibzada Farhan), இரண்டு ஐ.சி.சி. முழு உறுப்பினர் நாடுகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 சர்வதேச (T20I) தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நேற்று (14) நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் அவர் இந்தச் சாதனையைப் பதிவு செய்துள்ளார்.
இந்தத் தொடரில் தொடர்ச்சியாக மூன்றாவது அரைச்சதத்தைப் பதிவு செய்த பர்ஹான், மொத்தமாக 238 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
இதன் மூலம், இரண்டு ஐ.சி.சி. முழு உறுப்பினர் நாடுகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 சர்வதேச தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இதற்கு முன்னர், இந்திய அணியின் அபிஷேக் சர்மா இந்த ஆண்டில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் 229 ஓட்டங்களைக் குவித்திருந்தமையே சாதனையாக இருந்தது.
இந்நிலையில், 238 ஓட்டங்களைக் குவித்துள்ள சாஹிப்ஸதா பர்ஹான், அபிஷேக் சர்மாவின் சாதனையை முறியடித்துள்ளார்.








