சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கலகொட அத்தே ஞானசார தேரரின் காவி உடையைக் கழற்றுவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் எடுத்துள்ள தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யும் உத்தரவைப் பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களைப் பரிசீலிக்கும் நீதியரசர்கள் குழாமிலிருந்து, மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹாந்த அபேசூரிய இன்று (14) விலகியுள்ளார்.
இதனையடுத்து, குறித்த மனுக்களைப் பரிசீலிப்பதற்காக மூவர் அடங்கிய புதிய நீதியரசர்கள் குழாம் பெயரிடப்பட்டுள்ளது.
நீதியரசர்களான அமல் ரணராஜா, மஹேன் கொப்பலாவ மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் இந்தக் குழாமில் இடம்பெற்றுள்ளனர்.








