தற்போதைய அரசாங்கம் பாதுகாப்பு படைகளின் பிரதானி பதவியைப் பராமரிக்க நடவடிக்கை எடுக்காது என்று பாதுகாப்புச் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த (ஓய்வு) தெரிவித்துள்ளார்.
இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“நாங்கள் பாதுகாப்பு படைகளின் பிரதானி பதவியை தொடர்ந்து பராமரிக்க எதிர்பார்க்கவில்லை. அது தொடர்பான பணிகளை பாதுகாப்பு அமைச்சகம் மூலம் மேற்கொள்வோம்.” என்றார்.