UEFA மற்றும் CONCACAF அமைப்புகள் தங்களது தேசிய கால்பந்து சங்கங்களுக்கு வழங்க கோரியுள்ள 2.1 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி தொடர்பில் மதிப்பீட்டை மேற்கொள்ளுமாறு FIFA தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ உத்தரவிட்டுள்ளார்.
எனினும், குறிப்பிட்ட தொகைக்கு இதுவரை எந்தவித உறுதிப்பாட்டையும் அவர் வழங்கவில்லை.
இந்த விவகாரம் தொடர்பில் FIFA கவுன்சில் எதிர்வரும் ஒக்டோபர் 15ஆம் திகதி பரிசீலனை செய்யவுள்ளது.
“எந்தவொரு ஆரம்பகட்ட தொகையையும் அங்கீகரிக்கப்பட்ட உறுதிப்பாடாக கருத முடியாது” என இன்ஃபான்டினோ தெரிவித்துள்ளார்.








