லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை 194 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கச் செய்து, அதே வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இங்கிலாந்து, தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
பந்துவீச்சில் ஒல்லி ரொபின்சன் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டதுடன், பாகிஸ்தான் அணியின் மொஹமட் அப்பாஸ் இந்த டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.
இந்த வெற்றியின் மூலம் 2025-27 ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இங்கிலாந்து, இலங்கையை பின்தள்ளி முன்னேறியுள்ளது.
இதன் காரணமாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இலங்கை ஒரு இடம் பின்தங்கியுள்ளது.









