கொழும்பு 12, ஹமீத் அல் ஹூஸைனி கல்லூரியின் 2014ஆம் ஆண்டு அணியின் பழைய மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ள வருடாந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 25ஆம் திகதி வத்தளை விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான இந்தச் சுற்றுப்போட்டியில் 10 விளையாட்டுக் கழகங்கள் பங்கேற்கவுள்ளன.
இச்சுற்றுப்போட்டியை நடத்துவது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (18) ஞாயிற்றுக்கிழமை மருதானையில் அமைந்துள்ள எக்ஸ்சல் வேலட் மார்க்கோ போலோ லவுஞ்ச் மண்டபத்தில் நடைபெற்றது.
போட்டிகளை ஏற்பாடு செய்யும் குழுவின் தலைவர் சமீம் சம்சுதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக ஹமீத் அல் ஹூஸைனி கல்லூரியின் அதிபர் திருமதி சியானா டெயின் கலந்துகொண்டார். அத்துடன், போட்டிகளின் அனுசரணையாளர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
இதன்போது, போட்டியில் பங்கேற்கும் விளையாட்டுக் கழகங்களுக்கான ரி-சேர்ட்கள் மற்றும் வெற்றிக் கேடயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. கல்லூரி அதிபர் மற்றும் 2014ஆம் ஆண்டு அணியின் பழைய மாணவர்கள் இணைந்து அவற்றை அறிமுகப்படுத்தி வைத்தனர்.
மேலும், போட்டிகளுக்கு அனுசரணை வழங்கியவர்களுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
ஏ.எஸ்.எம். ஜாவித்









