தேசிய மக்கள் சக்தி (NPP) ஆட்சியிலுள்ள கொலொன்ன பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தோல்வியடைந்துள்ளது.
வரவு – செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 9 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில், ஒரு வாக்கு வித்தியாசத்தில் அது தோற்கடிக்கப்பட்டுள்ளது.
கொலொன்ன பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம், தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த தவிசாளர் சம்பத் குணசிங்க தலைமையில் இன்று (25) முதன்முறையாகச் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதற்கு முன்னரும், 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்திலும் தேசிய மக்கள் சக்தி அங்கு தோல்வியடைந்திருந்தது.
கொலொன்ன பிரதேச சபையில் எதிர்க்கட்சிக்கு 10 ஆசனங்களும், ஆளும் தேசிய மக்கள் சக்திக்கு 9 ஆசனங்களும் காணப்படுகின்றன.
எவ்வாறாயினும், தவிசாளரைத் தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் அதிக வாக்குகளைப் பெற்று, குறைந்த ஆசனங்களைக் கொண்டிருந்த தேசிய மக்கள் சக்தியிலிருந்து தவிசாளர் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







