நாசா (NASA) விண்வெளி வீரர் அனில் மேனன், சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) எடுத்த இலங்கையின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதன் மூலம், இலங்கையின் இயற்கை அழகை விண்வெளியிலிருந்து பார்ப்பதற்கான அரிய வாய்ப்பு இலங்கையர்களுக்குக் கிடைத்துள்ளது.
அனில் மேனனின் உத்தியோகபூர்வ இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் பகிரப்பட்ட இந்தப் புகைப்படத்தில், இந்து சமுத்திரத்தின் ஆழமான நீல நிற நீரால் சூழப்பட்ட இலங்கைத் தீவும், நாட்டின் சில பகுதிகளுக்கு மேலாகப் பரவியுள்ள வெள்ளை மேகங்களும் தெளிவாகப் பதிவாகியுள்ளன.
மேலும், பாக்கு நீரிணைக்கு அப்பால் இந்தியாவின் தென்கோடியையும் இந்தப் புகைப்படத்தில் காண முடிகின்றது.
அமெரிக்க விண்வெளிப் படையின் கேணலும் விமான மருத்துவ நிபுணருமான அனில் மேனன், 2026 ஜூலை மாதம் சோயுஸ் எம்.எஸ்-29 (Soyuz MS-29) விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தார்.
தற்போது எட்டு மாத கால விண்வெளிப் பயணத்தின் ஒரு பகுதியாக, எக்ஸ்பெடிஷன் 74 மற்றும் 75 (Expeditions 74 and 75) திட்டங்களில் விமானப் பொறியாளராகப் பணியாற்றி வருகின்றார்.
இக் காலப்பகுதியில் உயிரியல் மருத்துவம் மற்றும் விண்வெளி மருத்துவம் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் அவர், சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமியின் பல்வேறு நிலப்பரப்புகளின் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







