பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டி.எஸ். சேனாநாயக்க சந்தியில் கொழும்பு நோக்கிச் செல்லும் வீதியின் ஒரு பகுதி இன்று (20) இரவு 10 மணி முதல் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக கொழும்பு போக்குவரத்துப் பிரிவு அறிவித்துள்ளது.
குறித்த வீதிப் பகுதியில் கழிவுநீர் வெளியேறி வழிந்தோடும் கட்டமைப்பைச் சீரமைக்கும் பணிகளை கொழும்பு மாநகர சபை முன்னெடுக்கவுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரமைப்புப் பணிகள் நிறைவடையும் வரை குறித்த வீதிப் பகுதி மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், சாரதிகள் மற்றும் பொதுமக்கள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதற்கமைய, வெலிக்கடை திசையிலிருந்து பயணிக்கும் வாகனச் சாரதிகள் ஆயுர்வேத சந்தியில் கோட்டா வீதிக்குத் திரும்பி பொரளை நோக்கிப் பயணிக்க முடியும்.
மேலும், மொடல் ஃபார்ம் சந்தியிலிருந்து பழைய பர்லெஸ்க் வீதி வழியாக கனத்த சுற்றுவட்டத்தை நோக்கியும் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.








