கொழும்பு துறைமுகத்திலுள்ள படகு இல்ல இறங்குதுறைக்கு (Boat House Jetty) அருகில் கடலில் மிதந்த நிலையில் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று (18) காலை கடலில் சடலமொன்று மிதப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
சுமார் 45 வயது மதிக்கத்தக்க குறித்த நபர், சடலம் மீட்கப்பட்டபோது பழுப்பு நிறக் காற்சட்டையும் கறுப்பு நிற ரீ-சேர்ட்டும் அணிந்திருந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த மரணம் கொலையா அல்லது வேறு ஏதேனும் சம்பவத்தின் விளைவாக ஏற்பட்டதா என்பது தொடர்பில் கொழும்பு துறைமுகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.







