அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி, இலங்கையின் வர்த்தக வங்கிகளில் இன்று (19), நேற்று புதன்கிழமையுடன் (18) ஒப்பிடுகையில் சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 336 ரூபாய் முதல் 337 ரூபாய் வரையான மட்டத்தில் பதிவாகியுள்ளது.
செலான் வங்கி (Seylan Bank)
அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை மாற்றமின்றி 328.50 ரூபாயாகவும், விற்பனை விலை மாற்றமின்றி 337.75 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
தேசிய அபிவிருத்தி வங்கி (NDB Bank)
கொள்வனவு விலை 328.20 ரூபாயிலிருந்து 328.25 ரூபாயாகவும், விற்பனை விலை 337.20 ரூபாயிலிருந்து 337.25 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
மக்கள் வங்கி (People’s Bank)
கொள்வனவு விலை 328.65 ரூபாயிலிருந்து 328.70 ரூபாயாகவும், விற்பனை விலை 336.80 ரூபாயிலிருந்து 336.85 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
கொமர்ஷல் வங்கி (Commercial Bank)
கொள்வனவு விலை 326.77 ரூபாயிலிருந்து 326.82 ரூபாயாகவும், விற்பனை விலை 336.70 ரூபாயிலிருந்து 336.75 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
சம்பத் வங்கி (Sampath Bank)
அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை மாற்றமின்றி 328.75 ரூபாயாகவும், விற்பனை விலை மாற்றமின்றி 336.75 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.








