2026ஆம் ஆண்டுக்கான SLIM தேசிய விற்பனை விருதுகள் விழாவில் கொகா-கோலா பீவரேஜஸ் ஸ்ரீலங்கா நிறுவனம் ஆறு விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.
நிறுவனத்தின் விற்பனைக் குழுவினரின் சிறந்த செயல்திறன், அர்ப்பணிப்பு மற்றும் தொழில்முறைத் திறமைகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி, இரண்டு வெண்கல விருதுகளும் நான்கு சிறப்புத் தகுதிச் சான்றிதழ்களும் நிறுவனத்திற்குக் கிடைத்துள்ளன.
கயான் மிந்திக மற்றும் சாமர பெரேரா ஆகியோர் வெண்கல விருதுகளைப் பெற்றுள்ளதுடன், அசங்க பிரதீப், இஷான் சாலிந்த, உமேந்திர அபேநாயக்க மற்றும் அலஸ்டயர் சென் ஆகியோர் சிறப்புத் தகுதிச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளனர்.
சில்லறை விற்பனை, விற்பனைச் செயலாக்கம், பிராந்திய முகாமைத்துவம் மற்றும் தேசிய விற்பனைத் தலைமைத்துவம் உள்ளிட்ட முக்கிய பிரிவுகளில் வெளிப்படுத்திய சிறந்த திறமைகளுக்காக இவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
இலங்கையின் முன்னணி நிறுவனங்களின் விற்பனை நிபுணர்களுடன் போட்டியிட்டு இந்த வெற்றியைப் பெற்றுள்ளமை, கொகா-கோலா நிறுவனத்தின் விற்பனைக் குழுவினரின் திறமையையும் தொழில்முறை அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த கொகா-கோலா நிறுவனத்தின் இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான பிராந்தியத் தலைவர் மரியோ பெரேரா,
ஒவ்வொரு வெற்றிகரமான வணிகத்திற்குப் பின்னாலும் அர்ப்பணிப்பு, மன உறுதி மற்றும் வாடிக்கையாளர்கள் குறித்த சரியான புரிதலுடன் செயற்படும் திறமையான குழுவொன்று காணப்படுவதாகக் குறிப்பிட்டார்.
தமது விற்பனை நிபுணர்களின் திறமைக்கும் அர்ப்பணிப்பிற்கும் கிடைத்த அங்கீகாரமே இந்த விருதுகள் எனத் தெரிவித்த அவர், வாடிக்கையாளர்களுடனான உறவை வலுப்படுத்துவதிலும், நிறுவனத்தின் தயாரிப்புகள் நாடு முழுவதும் உள்ள நுகர்வோரைச் சென்றடைவதை உறுதிப்படுத்துவதிலும் அவர்கள் முக்கிய பங்காற்றுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஊழியர்களின் திறமைகளை அங்கீகரித்து, அவர்களின் தொழில்முறை வளர்ச்சிக்கு முதலீடு செய்வதன் மூலம் தொழில்துறையில் சிறந்து விளங்குவதற்கு நிறுவனம் தொடர்ந்து ஊக்கமளித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆறு விருதுகளும் விற்பனைத் திறமைகளை மேம்படுத்துதல், தொழில்முறைச் சிறப்பை ஊக்குவித்தல் மற்றும் நிறுவனத்தின் நீண்டகால வளர்ச்சிக்குப் பங்களிக்கும் திறமையான பணியாளர்களை உருவாக்குதல் ஆகியவற்றில் கொகா-கோலா பீவரேஜஸ் ஸ்ரீலங்கா நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.







