யெமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகப் போரிட்டு வரும் சவூதி தலைமையிலான கூட்டணிப் படைகள், சவூதியின் கிழக்குப் பிராந்தியத்தில் மற்றுமொரு ஆளில்லா விமானத்தை (ட்ரோன்) இடைமறித்து அழித்துள்ளதாக அறிவித்துள்ளன.
கூட்டணியின் பேச்சாளர் கேணல் துர்கி அல் மாலிக் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று மணி நேரத்திற்குள் குறித்த பிராந்தியத்தில் மூன்று ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகக் கூட்டணி தெரிவித்துள்ளது.
அத்துடன், தலைநகர் ரியாத் நோக்கி ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகளும் இடைமறித்து அழிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.







