ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலங்கையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இதன்போது, நாட்டின் பொருளாதார முன்னுரிமைகள், வரி மறுசீரமைப்புகள், அரச ஊழியர்களுக்கான சம்பளத் திருத்தங்கள் மற்றும் எதிர்வரும் ஆண்டுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு முன்மொழிவுகளை அவர் முன்வைத்தார்.
தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பை அதிகரித்தல், பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் அச்சிடப்பட்ட நூல்களுக்கு பெறுமதி சேர் வரியை (VAT) நீக்குதல், அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளைத் திருத்தியமைத்தல் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மேலதிக நிவாரணங்களை வழங்குதல் உள்ளிட்ட முன்மொழிவுகளும் இதில் உள்ளடங்குகின்றன.
மேலும், உட்கட்டமைப்பு அபிவிருத்தி, கல்வி, சுகாதாரம், விவசாயம், சுற்றுலாத்துறை, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு ஆகிய துறைகளுக்கான திட்டங்களையும் ஜனாதிபதி முன்வைத்தார்.
தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்படும் மூன்றாவது வரவு செலவுத் திட்டம் இதுவாகும்.
2027ஆம் ஆண்டுக்கான முழுமையான வரவு செலவுத் திட்ட உரை, விரிவான முன்மொழிவுகள், நிதி ஒதுக்கீடுகள் மற்றும் இணைப்புகள் அடங்கிய ஆவணத்தை கீழே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.








