நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் வெளியிடப்பட்ட 86ஆம் இலக்கக் கட்டளையை மீறி, நுகர்வோருக்குத் தொடர்ச்சியாக எரிவாயு விநியோகிக்கத் தவறியமை தொடர்பிலேயே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு கொழும்பு புதுக்கடை இலக்கம் 5 நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன்போது, லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு அழைப்பாணை பிறப்பித்த நீதிமன்றம், வழக்கை எதிர்வரும் நவம்பர் 11ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டுள்ளது.







