அஸ்வசும நலன்புரி நன்மைகளைப் பெறுவதற்குத் தகுதியற்றவர்கள் மேன்முறையீடு செய்வதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அஸ்வசும நலன்புரி கொடுப்பனவுகளைப் பெறுவதற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் 1,391,830 விண்ணப்பங்கள் தகுதியற்றவையாக நிராகரிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
நலன்புரி நன்மைகள் சட்டத்தின் 11ஆம் பிரிவுக்கு அமைய, இவ்வாறு தகுதியற்றவர்களாக அறிவிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மேன்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக 2026 ஒக்டோபர் 29ஆம் திகதி முதல் நவம்பர் 11ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை, தாம் தெரிவு செய்யப்பட்டுள்ள நலன்புரிப் பிரிவு குறித்து திருப்தியடையாத தகுதியான பயனாளிகளும் மேன்முறையீடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.








