தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக, நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (27) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மாணவர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினரின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டதற்கு அமைய நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.








