சவூதி அரேபியாவின் ரியாத், நஜ்ரான் மற்றும் வாடி அல்-தவாசிர் ஆகிய மூன்று பகுதிகளிலும் ஆபத்து நீங்கியுள்ளதாக அந்நாட்டின் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த மூன்று பகுதிகளிலும் முன்னதாக அவசர எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஆபத்து நீங்கியுள்ளதாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சமூக ஊடகமான எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட தனித்தனி பதிவுகளில், பொதுமக்கள் தொடர்ந்து பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறும், சம்பவ இடங்களில் ஒன்றுகூடுவதையும் காணொளிகளைப் பதிவு செய்வதையும் தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.








