நிட்டம்புவ நகரில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று (23) இரவு 7.30 மணியளவில் தீ பரவியுள்ளது.
தீயைக் கட்டுப்படுத்துவதற்காக மூன்று தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், இந்தச் சம்பவத்தில் உயிர்ச்சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.







