தலவாக்கலை, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் இன்று (21) திறக்கப்பட்டுள்ளன.
நீர்த்தேக்கத்தின் நீரேந்தும் பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாகவே இரண்டு வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான தலைமைப் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் நீர்த்தேக்கத்தின் ஏனைய வான் கதவுகளும் திறக்கப்படக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன் கீழ்நிலைப் பகுதியிலுள்ள கொத்மலை ஓயாவின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
எனவே, கொத்மலை ஓயாவின் இருபுறங்களிலும் வசிக்கும் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு நுவரெலியா மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.








